மதுரையில் தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தி.மு.க ஆட்சியில் தினம் தினம் விழா நடத்தி, விழா நாயகனாக முதல்வர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

மு.க.ஸ்டாலின்

அதற்கு மட்டுமே அரசு அதிகமாக கவனம் செலுத்துகிறது. அதனால், மக்களுக்கு சேவை செய்வதில் குறைபாடு உள்ளது. கடந்த ஒன்னறை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால் பூஜ்ஜியம்தான் பதிலாக கிடைக்கும்.

நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்கள் கொண்டு வந்ததாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மக்களின் குறை நிறைகளை கனிவோடு கேட்கக் கூடியவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். நான் சொல்வதுதான் சட்டம் என நடந்துகொள்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் என்று அவர் கூறுகிறார், ஆனால் இன்றைக்கு தலைநகர்  கொலைநகராக மாறியுள்ளது.

ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் கடந்த மாதம் 31 நாட்களில் 131 கொலைகள் நடந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 23 கொலைகள் நடந்துள்ளது என குற்ற ஆவண காப்பகத்தில் புள்ளி விபரம் கூறுகிறது.

இதைத்தான் எடப்பாடியார் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடத்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் அதற்கு காவல்துறை சார்பில் அளித்த பதில் அறிக்கையில், கொலைகள் நடப்பதை மறைக்கவில்லை, ஆனால் எண்ணிக்கை வேறுபாடு உள்ளது என்று பதிலளித்தனர்.

போலீஸ் மீது துளி அளவும் அச்சம் இல்லாமல் ரெளடிகள், குண்டர்கள் உள்ளனர். ஆனால் பிரச்னைக்குரிய விஷயங்களை சரி செய்யாமல் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது.

 அம்மா ஆட்சி காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் ஸ்காட்லாந்து போலீஸுக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது. ஆனால் இன்று தலைகீழாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது. பள்ளிக்கூடங்களில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

முதலமைச்சர் ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி மூலம் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பட்டப்பகலில் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. குற்றங்களை தடுப்பதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டதா என்ற கவலை மக்களிடம் எழுந்துள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாடு படுதோல்வி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அரசு பணியாளர் நடத்தை விதிப்படி  ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சியை புகழ்ந்து பேசியும் அதனால் எதையும் சாதிக்க முடியாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனக்குமுறலில் உள்ளனர்.  மாநாட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால் முதல்வர் பேசும்போதே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை விட்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர்.

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு, நம்பிக்கையை தொலைத்த மாநாடாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பட்டை நாமத்தை போட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய முதல்வர் மாநாட்டில் அதுகுறித்து பேசவில்லை. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கூறிவிட்டு தற்பொழுது ஏமாற்றிவிட்டார். எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் முதல்வர்" என்று தெரிவித்தார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/gqyNspf