கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், குப்பம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக அன்னை ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் ஒரு கல்குவாரி இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கல்குவாரியை செல்வக்குமார் என்பவர் நடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனை, சமூக செயற்பாட்டாளரான குப்பம் கிராமம், காளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் தொடர்ந்து புகாராக மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தெரிவித்து வந்தாராம். அதோடு, போராட்டங்களையும் முன்னெடுத்தாராம்.

ஜெகநாதன்

இந்த நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதன், பொலேரோ பிக்-அப் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து க.பரமத்தி போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மற்றொருபக்கம், கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'இது திட்டமிட்டக் கொலை. செல்வக்குமார்தான் திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்ற வைத்திருக்கிறார்' என்று குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், ஜெகநாதன் மீதி மோதிய வாகனம் செல்வக்குமாருடையது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால், செல்வக்குமார் தனது வாகனத்தைக் கொண்டு சக்திவேல் என்பவரை இயக்கவைத்து, ஜெகநாதன்மீது மோதவைத்து திட்டமிட்டுக் கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

குவாரி

இந்த நிலையில், அன்னை ப்ளூ மெட்டல்ஸ் கல்குவாரியின் உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் டிரைவர் சக்திவேல்மீது கொலை வழக்கு பதிவுசெய்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அனுமதியில்லாமல் இயங்கிவந்த கல்குவாரிக்கு எதிராக போராடிவந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏர்படுத்தியிருக்கிறது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/hSYTVsp