நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், அதே பகுதியில் உள்ள நந்தன் பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில், முத்துக்குமார் தனது புதிய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடையின் உள்ளே டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, ராசிபுரத்திலிருந்து நாமகிரிப்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், நந்தன் பேக்கரிக்கு அருகே வந்தபோது, அங்கே நின்ற முத்துக்குமாரின் பைக்கை பார்த்தபிறகு, தனது வாகனத்தை அங்கே நிறுத்தியிருக்கிறார்.

பழைய வாகனத்தை நிறுத்தும் மர்ம நபர்

அதன்பிறகு, தொலைபேசியில் பேசுவது போல் காட்டியபடி அங்கும் இங்கும் நடமாடியுள்ளார். பின்னர், முத்துக்குமாரின் புதிய இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தலைக்கவசம் அணிந்தபடி திருடிச் சென்றிருக்கிறார்.

அதற்குள், பேக்கரியில் டீகுடித்துவிட்டு வெளியே வந்த செல்வக்குமார், தனது பைக் அங்கே காணாமல் போனதை கண்டு அதிர்ந்துபோயுள்ளார். உடனடியாக, இது குறித்து முத்துக்குமார் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மர்ம நபர் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய வாகனத்தை எடுக்கும் மர்ம நபர்

இந்த நிலையில், அங்கே அருகில் இருந்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி-யில் மர்ம நபர் தான் ஓட்டிவந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, அதைவிட புதிதாக இருந்த முத்துக்குமாரின் வாகனத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிந்திருந்தன. முத்துக்குமார் அந்த சி.சி.டி.வி காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/Z6UKCp2