தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வனசந்தியா. இவர், உடன்குடி அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்கு தெரிய வந்ததும். வனசந்தியாவை அவரின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனையடுத்து வனசந்தியா, கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கோபமடைந்த கார்த்திக், வனசந்தியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கார்த்திக்

பெற்றோர்கள் வேலைகுச் சென்ற நிலையில், வீட்டில் வனசந்தியா மட்டும் தனியாக இருந்துள்ளார். ”எங்கிட்ட ஏன் பேசுறத நிறுத்திட்ட?” எனச் சொல்லி தன்னிடம் பேசுமாறு வனசந்தியாவை வற்புறுத்தியுள்ளார். ”என்னை மறந்துடு. இனிமேல் எங்கிட்டப் பேச வேண்டாம். என்னை தொந்தரவு செய்யாத. வீட்டுல இருந்து வெளிய போ” எனச் சொல்லி வீட்டின் கதவை மூட முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியாவின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடி விட்டார்.

இதில் பலத்த காயமடைந்த வனசந்தியா, வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தனது வீட்டுக்குச் சென்ற கார்த்திக், வீட்டில் உள்ள அறையின் கதவைப் பூட்டிவிட்டு மின்விசிறி யில் கயிற்றால் தூக்கு மாட்டியுள்ளார்.

கத்தி

இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பேச மறுத்ததால், கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்ததுடன் காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/58VvsoL