கோவை பீளமேடு காவல்நிலையம் சரக எல்லைக்குட்பட்ட ஓர் அப்பார்மென்டை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற முதியவர் ஓர் புகார் அளித்தார். அதில், ``கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலம் எங்கள் அப்பார்ட்மென்டில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இருப்பதாக சொல்லி, எங்களுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.

கோவை

அவர்கள் வலையில் விழுபவர்களை, தவறான வழிநடத்துதல் மூலம் எங்கள் அப்பார்ட்மென்டுக்கு வரவழைத்து பணம் பறித்து ஏமாற்றி வருகின்றனர். இதனால் எங்கள் அப்பார்ட்மென்டடில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.” என்று கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த கும்பலை ட்ராக் செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தோம்.

ஆணையர் பாலகிருஷ்ணன்

செல்போன் எண்களை கண்காணித்தபோது, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்த கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

பெங்களூரில் ஓர் அப்பார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்து, 11 நபர்களை பணியமர்த்தியுள்ளார். அவர்கள் ஆன்லைனில் தங்களிடம் சிக்கும் நபர்களை, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பல அப்பார்ட்மென்ட்களில் பெண்கள் இருப்பதாக சொல்லி, பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் 6 பெண்கள் உள்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

அவர்களிடம் இருந்து 10 சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லோகேண்டா என்ற வலைதளத்தில் செல்போன் எண்களை பதிந்து, ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கியுள்ளனர்.

பிறகு பணம் கொடுத்தவர்களிடம் போலியான முகவரி கொடுத்து ஏமாற்றியுள்ளனர். மேலும் பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்துள்ளனர். கோவையில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை குறித்து, 360 டிகிரியில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

கஞ்சா சாக்லேட்

ஆந்திராவில் இருந்துதான் கோவைக்கு அதிகளவில் கஞ்சா கொண்டு வருகின்றனர். அதேபோல ராஜஸ்தானில் இருந்து கஞ்சா சாக்லேட் வருகிறது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை போலீஸ் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.” என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/TBaOjzL