புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள விட்டா நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி(48). இவரின் மனைவி மதலை அம்மாள்(45). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மதலை அம்மாளுக்குத் தெரியாமல், வேளாங்கண்ணி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இது, மதலை அம்மாளுக்குத் தெரியவர வீட்டில் கலவரம் வெடித்திருக்கிறது. அவ்வப்போது, இவர்கள் இருவருக்கிடையில், பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில், மதலை அம்மாளை, வேளாங்கண்ணி மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருக்கிறார். இதில், பதறித் துடித்தவர் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளி

இந்த நிலையில், அவர் உயிர் பிரியும் போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மண்ணெண்ணெய் ஊற்றிப் உயிரைப் பறித்த வேளாங்கண்ணி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது, தீர்ப்பளிக்கப்பட்டிருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. அபராதத்தைக் கட்டத்தறினால், மேலும், 5ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி, அப்துல்காதர் உத்தரவிட்டார். அதன்படி, குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/X2SUdWx