நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகன் சுரேஷ். பி.காம் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சுரேஷ்

அதோடு, சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த சுரேஷ், 'வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நன்பர்களிடம் பணம் வாங்கிய முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். மேலும், ஆன்லைன் ரம்மியில் இருந்து மீளமுடியவில்லை. பை...பை...மிஸ் யூ ரம்மி' என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்டு இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன், ``வெளிநாடு போகிறேன் என்று என்னிடம் பணம் வாங்கி, அதை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விட்டிருக்கிறான். இதனால், மனமுடைந்து தற்கொலை பண்ணிக்கிட்டான். தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டான்.

கடிதம்

இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் ரூ. 5 லட்சத்தை இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அவரின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்


from மாவட்ட செய்திகள் https://ift.tt/kui2hyM