புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில், வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் ஆறுமுகம். இவர் நரிமேடு பகுதியில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் புதிதாகக் குடியேறியுள்ளவர்களிடம், மின் இணைப்புக்குப் பெயர் மாற்றம் செய்யவும், சர்வீஸ் நம்பர் ஒதுக்கவும் ஒவ்வொருவரிடமும் ரூ.200 லஞ்சமாக வசூலித்திருக்கிறார். இது தொடர்பாக, பயனாளி ஒருவர் மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு ஆறுமுகத்தை அணுக, "கையெழுத்துப் போட்டுட்டு, ரூ.200 கொடுத்துட்டுப் போங்க’’ என்று அவர் கேட்கிறார்.

பயனாளி, "சார்... என்னிடம் ரூ.170-தான் இருக்கு” என்கிறார். ``அட ஏங்க... இருக்கிறதைக் கொடுத்துட்டுப் போங்க” என்று சொல்லிட்டு, அந்தப் பணத்தை வாங்கி சட்டை பாக்கெட்டுக்குள் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, துறைரீதியான நடவடிக்கைக்காக, வணிக ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, மின்வாரியம் சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் இணைப்பு மாற்றத்துக்கு அதிகாரி லஞ்சம் வசூலிக்கும் சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/p5hbDOC