வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ), வெளிநாட்டில் இருந்து நிதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அதை புதுப்பிக்கவும் வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள்

இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதில் மோசடி நடப்பதாக சி.பி.ஐக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகள், இடைத்தரகர்கள், தொண்டு நிறுவனங்கள் என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது.

சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வரும் பர்மோத் குமார்பசின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு பங்களிப்புக்காக தொண்டு நிறுவனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு பர்மோத் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.

லஞ்சம்

சி.பி.ஐ அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்தபோது, பர்மோத், கோவை சாய் பாபா கோவில் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ராஜசேகர் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

``உங்களது தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான பதிவு புதுப்பித்தல் எங்களிடம் நிலுவையில் உள்ளது. உங்கள் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது சில குளறுபடிகள் உள்ளன. இதற்கு 5% அபராதம் செலுத்த வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

டாக்டர் ராஜசேகர்

இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்தின் ஆடிட்டர் வாகேஷ், பர்மோத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மற்றொரு ஆடிட்டர் சுகுணா என்ற பெண் பர்மோத்தைத் தொடர்பு கொண்டு லஞ்ச தொகையை ரூ.1.50 லட்சமாக குறைக்க சொல்லியிருக்கிறார்.

ஆனால், பர்மோத் மறுத்துவிட்டார். மேலும், முதல்கட்டமாக ஹவாலா ஆபரேட்டர் மூலம் ரூ.1.50 லட்சம் தரவேண்டும், புதுப்பித்தல் நடைமுறை முடிந்தபிறகு ரூ.50,000 தரவேண்டும் என கூறியுள்ளார். அவர் கூறியபடி, கடந்த மாதம் வாகேஷ், ஒரு ஹவாலா ஆபரேட்டரிடம் ரூ.1.50 லட்சம் தந்துள்ளார்.

வாகேஷ்

கூடவே இதேபோல நாடு முழுவதும் பல இடங்களில் பர்மோத் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ, பர்மோத், டாக்டர் ராஜசேகர், சுகுணா, வாகேஷ், அதிகாரிகள், ஹவாலா நெட்வொர்க் ஆபரேட்டர்கள் என நாடு முழுவதும் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் பர்மோத், வாகேஷ், 6 அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, அசாம்,

கைது

மணிப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை நாடு முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது ரூ.3.21 கோடி ரொக்கம், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன



from மாவட்ட செய்திகள் https://ift.tt/haABDnk