சிறு குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சலுகை கட்டணத்தில் ரயிலில் அனுப்பலாம் என்று தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

விவசாய உற்பத்தி பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் அவற்றை சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு அதிகமாக செலவு செய்து கூடுதலாக நஷ்டப்பட்டு வருகிறார்கள்.

கிசான் ரயில் பிரசுரம் வெளியிடல்

Also Read: `பொங்கல் கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை!' - சேதமடைந்த நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தித் தொடர்பு அலுவலரிடம் கேட்டோம். ``கடந்த ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில் கிசான் ரயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிஃபிளவர், பச்சை மிளகாய், வெள்ளரி, பட்டாணி, பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, எலுமிச்சை, அண்ணாசி, மாதுளை, பேரிக்காய், கிவி, லிச்சி போன்ற பழ வகைகளையும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் சிறு குறு விவசாயிகள் கிசான் ரயில் மூலம் அனுப்ப முடியும்.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் மாநிலங்களில் அதிகமாக விளையக் கூடிய விவசாய விளைபொருட்களை, தேவைப்படும் பீகார், டெல்லி, அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு கிசான் ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்ட விவசாயிகளும் பலனடையும் வகையில் விவசாயிகளிடம் பிரசாரம் செய்து வருகிறோம்.

பிரசுர விவரம்

Also Read: `இது கார்ப்பரேட்டுகளுக்கே சாதகமாக உள்ளது!' - மரபணு மாற்ற உணவுகளுக்கான வரைவு குறித்து ஆர்வலர்கள்

இதற்காக ஒரு மாத காலம் மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாவூர்சத்திரம் போன்ற ஊர்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்." என்றார்.

கிசான் ரயில் சேவை பற்றிய துண்டு பிரசுரங்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் சமீபத்தில் மதுரையில் வெளியிட்டார்.

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் இந்த கிசான் ரயில் சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3eWi5Mt