பஞ்சாப் சென்ற பிரதமருக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கிரஸ் அரசு செய்யவில்லை என்று பாஜக-வினர் தமிழகத்தில் பல இடங்களில் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டுடன் பாஜகவினர்

கடந்த 6-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் கண்டணப்பேரணி நடத்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்பாட்டங்களையும், பிரதமரின் பெயரில் சிறப்பு பூஜைகளையும் பாஜகவினர் நடத்தி வருகிறார்கள்.

பாஜக இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் பாஜகவினர் மதுரை பாண்டி கோயிலில் பிரதமருக்காக பிரார்த்தனை செய்து ஆடு பலியிட்டனர்.

டன் சங்கரபாண்டியன்

காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் வகையில் ஆட்டின் தலையில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற வாசகத்தையும், கைச் சின்னம் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்திருந்தனர்.

பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவில் எங்கும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு ஆடு பலியிட்டதாக தெரிவித்தார்கள்.

ஆட்டுடன் பாஜகவினர்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோயிலுக்கு வெளியே சூடம் ஏற்றி பிரார்த்தனை செய்து ஆடு பலியிட்டுள்ளனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3q6so6V