விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், தி.மு.கவின் கிளைச்செயலாளராக உள்ளார். இவரின் மகன் பிரகாஷ். இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார். தற்போது தனியார் நிறுவனத்தில் பிரகாஷ் வேலை பார்த்து வருகிறார். அவரின் காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். ஆனால், அவர் வேலைக்குச் செல்வதை பிரகாஷ் விரும்பவில்லையாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அதனால், வேலைக்குச் செல்ல வேண்டாம் எனச் சொன்னதாக தெரிகிறது. ‘குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் வேலைக்குப் போகிறேன்’ என அந்தப் பெண் கூறியுள்ளார். வேலைக்குச் செல்வது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து வேறுபாடும், தகராறும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று பிரகாஷ் பெற்றோரிடம் வேலைக்கு அனுப்புவது தொடர்பாக, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்தாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அந்தப் பெண், பிரகாஷ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரைப் பற்றி விசாரணை செய்வதற்காக போலீஸார், பிரகாஷை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளனர். இதையடுத்து காவல் நிலையம் வந்த பிரகாஷ், ``என் மேலயே கம்ப்ளைண்ட் கொடுக்குறியா?” எனச் சொல்லி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை குத்தப் பாய்ந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை

பயத்தில் அந்தப் பெண் தப்பியோட முயற்சித்த நிலையில், முதுகில் குத்தி விட்டார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பதறிப் போன போலீஸார், பிரகாஷை கைது செய்தனர். முதுகில் கத்தியால் குத்தியதில் காயமடைந்த அந்தப் பெண் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த நிலையில், காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3IiDXOB