கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு 'வைஃப் ஸ்வாப்பிங்' என்ற பெயரில் பல கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவது தெரியவந்தது. கப்பிள் ஷேரிங்(Couple Sharing) என்ற பெயரில் இவர்கள் சமூக வலைத்தளங்களில் குழுவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.` `சீக்கிரட் சாட்' மூலம் இவர்கள் தொடர்புகொண்டு மனைவிகளை மாற்றிக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிலர் இதற்காக பணம் கொடுக்கும் நிலையும் உள்ளதாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

டெலிகிராம், மெசேஞ்சர் ஆப்களில் இதற்காக ரகசிய குழுக்களை ஏற்படுத்தி இவர்கள் செயல்பட்டுள்ளனர். சங்கனாசேரி இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் கார்கச்சால் பத்தநாட்டைச் சேர்ந்த அந்த பெண்ணின் கணவர், ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களின் மொபைல் போன், சமூக வலைத்தள கணக்குகளை கண்காணித்த போலீஸார் இந்த கும்பலில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சங்கனாசேரி பெண்ணின் புகார் காரணமாக பல குழுக்களை போலீஸார் கண்காணித்துள்ளனர். அதில் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் என கருதப்படும் பல வி.ஐ.பி-க்களும் இந்த குழுவில் ஃபேக் ஐடி மூலம் அங்கத்தினராய் இருப்பதாக போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இந்த குழுவில் உள்ளவர்கள் தங்கள் இணையுடன் புகைப்படம் அப்லோட் செய்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் சமந்தப்பட்டவர்களிடம் பேசி, அவர்களின் வீடுகளிலோ, பொதுவான விடுதிகளிலோ மனைவிகளை மாற்றி பாலியல் உறவு கொள்வதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

2019-ம் ஆண்டு காயாங்குளத்தில் ஷேர் சாட் மூலம் மனைவிகளை மாற்றுவதாக புகார் எழுந்தது. அதன் பிறகு சங்ஙனாசேரியில் இதுபோன்ற புகார் எழுந்துள்ளது. பரஸ்பரம் விருப்பத்துடன் கப்பிள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும் கட்டாயப்படுத்துவதாக புகார் வந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் போலீஸார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3JXtfi7