இந்தியாவில் திருமணக் கொண்டாட்டங்களின் முகம் கடந்த சில வருடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய திருமணங்களில் அந்த மாற்றங்களை நாமும் கண்டுவருகிறோம். திருமணத்திற்கு முன்பு நடக்கும் நிச்சயதார்த்த விழாவில்கூட மணமகனும், மணமகளும் இணைந்து புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது ஒரு காலம். இன்று திருமணத்துக்கு முந்தைய ப்ரீ வெடிங் போட்டோஷூட்டில் சினிமாவுக்கே சவால்விடும் விதமான போட்டோக்களும், வீடியோக்களும் எடுக்கப்படுகின்றன.

அதேபோல, திருமண மண்டப அரங்கிற்குள் மணமகனும், மணமகளும் நுழையும்போது அவர்களுக்கு இருபுறமும் நின்றுகொண்டு மலர்தூவும் பெண்கள், திடீரென அவர்களை வரவேற்று நடனமாடும் வழக்கம், உயர் வர்க்க திருமணங்களில் மட்டுமே அரிதாக நடந்துவந்தது. தற்போது, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வரும் மணமகள், காரில் இருந்து இறங்கும்போதே நடனமாடிக் கொண்டு திருமண மண்டபத்திற்குள்ளே வருவதும், அங்கு நடக்கும் பாட்டு கச்சேரிகளுக்கு நடனமாடுவதும் எல்லா திருமணங்களிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பல நேரங்களில் அவருடன் அவரது உறவினர்களும், பெற்றோர்களும்கூட நடனமாடும் நிகழ்வுகள் நடக்கின்றன.

Marriage (Representational Image)

Also Read: Google meet-ல் திருமணம்; G-Pay-ல் மொய்; zomato மூலம் சாப்பாடு; Flipkart-ல் கிஃப்ட்; அடடே ஜோடி!

தென்னிந்தியாவில் கேரள மாவட்டத்தில் தொடங்கிய இந்த கலாசாரம், சமீபகாலமாக தமிழக திருமணங்களிலும், பெருநகரங்கள் மட்டுமல்லாது, சிறு நகரங்கள், கிராமங்கள்வரை களைகட்டுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் பியூட்டி பார்லர் நடத்திவரும் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டு, திருமணத்திற்காக பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபம் ஒன்று புக் செய்யப்பட்டது.

ஜனவரி 19-ம் தேதி இரவு மணப்பெண் அழைப்பு முடிந்ததும், மேடையில் மணமகனும், மணப்பெண்ணும் அமர்ந்திருக்க, உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பாட்டுக் கச்சேரியில் பாடப்பட்ட பாட்டுக்கு நடனமாடிய உறவினர்கள், மணப்பெண்ணையும் ஆடுவதற்கு அழைத்திருக்கிறார்கள். சிறிது தயக்கத்திற்குப் பின் மணமகளும் அவர்களுடன் ஆடியுள்ளார்.

உறவினர்கள் அனைவரும் அதனை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தபடி இருக்க, அவர் நடனமாடியதை விரும்பாத மணமகன், `ஏன் இப்படி பண்ற?' என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த வாக்குவாதம் முற்றி மணமகளின் கன்னத்தில் அறைந்திருக்கிறார் மணமகன். அதில் அதிர்ச்சியான மணமகள், `எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்' என்று சொல்லியிருக்கிறார்.

மணமகளின் தந்தையும், `திருமணத்திற்கு முன்பே என் மகளை இப்படி அடிக்கும் நீ எப்படி என் மகளை பார்த்துக்கொள்வாய்? இந்தக் கல்யாணம் நடக்காது. நீ என் மகளுக்கு வேண்டாம்' என்று கோபப்பட்டிருக்கிறார். ஆனால், `தெரியாமல் கோபத்தில் செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள்' என்று பெண்ணின் தந்தையிடம் மணமகன் மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Marriage - Representational Image

Also Read: தாமதமாக வந்ததால் மாப்பிள்ளையை மாற்றிய பெண்வீட்டார்... திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்!

மணமகனின் பெற்றோரும், மணமகளின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுப் பார்த்திருக்கின்றனர். ஆனால், அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணமகள் உறுதியாக நின்றதால், அவரை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

தொடர்ந்து, நிச்சயக்கப்பட்ட அதே தேதியில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைத்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துபேசி, பெண்ணின் சம்மதத்துடன் செஞ்சியைச் சேர்ந்த முறை மாப்பிள்ளையை பேசி முடித்தனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க நேற்று காலை பண்ருட்டி திருவதிகை கோயிலில் முறைப் பையனுடன் பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qO3YiV