பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மகன் திருமணம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

திருமண நிகழ்ச்சி

Also Read: ஒருநாள்... ஓராயிரம் அனுபவங்கள்... டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் 24 மணி நேரம்

விவசாயி அணி தலைவர் ஜி.கே. நாகராஜ், எம்.எல்.ஏ காந்தி, குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறி நிர்வாகிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தமிழிசை.

இதுகுறித்து ஜி.கே. நாகராஜ் கூறுகையில், ``அண்ணாமலை, காந்தி, நான் மணமக்களை வாழ்த்திவிட்டு கீழே இறங்கினோம். முக்கிய நிர்வாகிகளுக்கு சாப்பிட தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். அங்கு தமிழிசையும் இருந்தார். அவரையும் சாப்பிட அழைத்தோம்.

உணவு பரிமாறும் தமிழிசை

அவர், ‘வேண்டாம்.’ என்று கூறிவிட்டு, ‘கட்சியின் உண்மையான உழைப்பாளி, உங்களுக்கு பரிமாறுவதில் பெருமை.’ என்று எங்கள் மூன்று பேருக்கும் அன்போடு பரிமாறினார். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

புதுச்சேரி, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பவர், உணவு பரிமாறுவது சாதாரண விஷயமல்ல. வேறு யாரும் இதை செய்ய மாட்டார்கள். மற்ற கட்சிகளில் ஆளுநரின் அருகிலேயே யாரும் செல்ல முடியாது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று தன்னம்பிக்கையுடன் அடிக்கடி கூறியவர்.

உணவு பரிமாறும் தமிழிசை

தற்போது, தமிழ்நாட்டில் நாங்கள் 4 இடங்களில் வென்றதற்கு அவரும் ஓர் காரணம். கடுமையான உழைப்புதான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது” என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/350Sd01