கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இஸ்லாமியரான இவர், கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர். அனீஸ் முகநூல் பக்கத்தில், கடவுள் மறுப்பு கொள்கை தொடர்பாக ஏராளமான கருத்துகளை `Ex Muslim’ என்ற அடைமொழியுடன் பதிவு செய்வார்.

அனீஸ்

Also Read: ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை... லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி

அந்த வகையில் இஸ்லாம், கிறிஸ்துவம் மதங்கள் குறித்து விமர்சித்து பதிவு போட்டுள்ளார். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணியை ஒப்பிட்டு இஸ்லாம் குறித்து விமர்சித்திருக்கிறார்.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில், மதங்களுக்கு இடையே பகை உணர்வை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அனீஸை கைது செய்தனர்.

அனீஸ்

அனீஸின் கைதுக்கு பல்வேறு இடங்களில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே, அனீஸின் ஜாமீன் மனு கோவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சக்திவேல், ``மனுதாரர் கடவுள் மறுப்பாளர். இந்திய அரசியலமைப்புக்கு சட்டத்துக்குட்பட்டு, தனது கருத்துகளை வெளியிட அவருக்கு உரிமை உண்டு. அதேநேரத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை சிதைக்கும் வகையின் அது இருக்கக் கூடாது.

தீர்ப்பு

மனுதாரர், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் உணரவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.” என்று உத்தரவிட்டார்.

அனீஸ் தினமும் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FpHFUS