புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்ட வழங்கல் அதிகாரியாக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம், புதிய குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில்தான், இந்தப் பணிகளைச் செய்வதற்குப் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த பலரும் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பதற்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் பெயர் திருத்தம், நீக்கம், புது கார்டு வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு முறையே ரூ.200 லிருந்து ரூ.1000 வரையிலும் லஞ்சம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வேறுவழியின்றி பலரும் அவர் கூறிய பணத்தைக் கொடுத்துவிட்டு வேலையை முடித்துவிட்டு வந்திருக்கின்றனர். அப்போது, அங்கு நின்று இதனைப் பார்வையிட்ட ஒருவர் ரகசியமாக நடந்தவற்றை எல்லாம் மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: `அபராதம் வேண்டாம்னா, ரூ.10,000 எடு..!’ - மீன் வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்
அந்த வீடியோவில், வட்ட வழங்கல் அதிகாரி பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கி பையில் வைத்துக் கொள்வது தெளிவாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறந்தாங்கி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/335M81G
0 Comments