கோவை ஆலந்துறை அருகே நொய்யல் ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. ஆலந்துறை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அந்த மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. முக்கியமாக, இறந்தவரின் தலைப் பகுதியில் தொடங்கி பல இடங்களில் காயம் இருந்ததால்,

கோவை

Also Read: `எப்படி எங்களை முறைக்கலாம்?!' - கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல்

சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

உயிரிழந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு அவர், அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு திருட சென்றுள்ளார். இதைப் பார்த்த தோட்டத்தில் இருந்தவர்வர்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

திருட்டு

கட்டையால் அந்த நபரின் தலையில் தாக்க, பலத்த காயமடைந்த அவர் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசியுள்ளனர்.

இதுதொடர்பாக, விஸ்வநாதன், காளியப்பன், சம்பத்குமார், துரைசாமி, கார்த்திக், கணேசன், ஜெகநாதன், பொன்னுசாமி, ஜோதிராஜ், சரவணக்குமார் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

மேலும் இந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததற்காக, சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி கனகராஜ் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3nozKkp