``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பணிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன” என்று, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். அதற்கு, ``ஆதாரத்துடன் நிரூபிங்கள்!” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்திருந்தார்.

வேலுமணி

Also Read: மோதலுக்குத் தயாராகும் வேலுமணி - செந்தில் பாலாஜி; அனல் பறக்கும் கோவை உள்ளாட்சி வியூகங்கள்!

அதையடுத்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து அது தொடர்பாக ஆவணங்களை வழங்கினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ``கோவை மாவட்டத்தில் நேற்று 71மிமீ கனமழை பெய்திருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது போக்குவரத்தது சீர் செய்யப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தந்த டெண்டர் விவரங்கள் தெளிவாக இல்லை.

கோவை

அதில் முரண்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் செய்த தவறுகளை, அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியின்போது, பல பணிகள் தொடங்கப்படவில்லை. காரணம் நிதி ஆதாரம் இல்லை.

டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், நிதி இல்லை என்பதால் பணிகளை விட்டு சென்றுவிட்டனர். தேர்தல் நேரங்களில், தீர்மானங்கள் இல்லாமல் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே, சாலைகளை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் கடந்த ஆட்சியாளர்களுக்கு வரவில்லை.

கோவை மழை

தற்போது, ரூ.200 கோடி மதிப்பில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய முதல்வர் நிதி அளித்திருக்கிறார். சூயஸ் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3opEnM8