கேரளா திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் முறையில், கோவை அவிநாசி சாலை அருகே உள்ள ஓர் அபார்ட்மென்டில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

லிவிங் டுகெதர்! -

Also Read: Made-in கோவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

சமீப காலமாக, அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடை சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராகேஷ் மீது ஜெயந்தி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், தன் ஹேண்ட் பேகில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தின் மீது வீசியுள்ளார் ஜெயந்தி. மேலும், அதே வேகத்தில் ராகேஷை கத்தியாலும் குத்தியுள்ளார். இதில் ராகேஷ் நிலை தடுமாறி மயங்கியுள்ளார்.

ஆசிட்

இதையடுத்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தியும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இருவரையும் மீட்டு போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக ராகேஷ் மற்றும் ஜெயந்தி ஆகிய இரண்டு பேர் மீதும் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அப்பார்ட்மென்ட்

அவர்கள் இருவருக்கும் எத்தனை ஆண்டு பழக்கம், என்ன பிரச்னை போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3G4G5Zg