கோவை மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள். பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து வந்தும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வட இந்தியப் பெண் ஒருவரை, ஆண் ஒருவர் கையில் லத்தியை வைத்துக்கொண்டு, தகாத தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

வட இந்திய பெண்ணை தாக்கும் ஆண் வைரல் வீடியோ

Also Read: மிதந்த கார்.. பழுதான பேருந்து.. கோவை மாநகரை ஸ்தம்பிக்க வைத்த கனமழை!

கோவை சரவணம்பட்டி பகுதியில் ஶ்ரீ கற்பகம் மில்ஸ் என்ற பெயரில் ஓர் நூற்பாலை இயங்கி வருகிறது. அங்கு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல்நலக்குறைபாடு காரணமாக பணிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிதான் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், விடுதிக் காப்பாளர் லதா, ஹெச்.ஆர் மேனேஜர் முத்தையா ஆகியோர் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அப்போதுதான், அந்தப் பெண்ணை தகாத வார்த்தையில் திட்டிஅடித்ததாகக் கூறப்படுகிறது. முத்தையா, லதா ஆகியோர் வடமாநிலத்தை சேர்ந்த 4 இளம் பெண்களை தாக்கியதாகவும், அதில் ஒரு பெண் வலி தாங்காமல் கதறி அழுததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சரவணம்பட்டி காவல்நிலையம்

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.அதையடுத்து, சம்பவம் தொடர்பாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீஸார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஶ்ரீ கற்பகம் மில்ஸ் தரப்பில் கூறுகையில், ``இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சில பெண்கள் பணியில் சேர்ந்தனர். ஆனால், அவர்கள் எந்தத் தகவலும் சொல்லாமல், பணிக்கும் வராமல் விடுதியிலேயே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

ஶ்ரீ கற்பகம் மில்ஸ்

அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அந்தப் பெண் வார்டனை கீழே தள்ளிவிட்டார். அதன் பிறகுதான் பிரச்னை நடந்தது” என்று விளக்கமளித்தார்.

Also Read: கோவை: லிவிங் டுகெதர் உறவில் தகராறு?! - காதலன்மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய காதலிfrom மாவட்ட செய்திகள் https://ift.tt/3xXObjG