கேரள மாநிலத்தில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். ஆளும் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி என்பது சி.பி.எம் கட்சியைப் பொறுத்த அளவில் முதலமைச்சர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சி.பி.எம் மாநிலச் செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் இருந்துவந்தார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லை எனக் காரணம் கூறி கடந்த 2020 நவம்பர் 13-ம் தேதி செயலாளர் பதவியிலிருந்து நீண்ட விடுப்பில் சென்றார். இதையடுத்து தற்காலிக பொறுப்பில் ஏ.விஜயராகவன் நியமிக்கப்பட்டார்.

கொடியேரி பாலகிருஷ்ணன்!

கொடியேரி பாலகிருஷ்ணனின் இரண்டு மகன்கள் மீதும், 2019 , 2020-ம் ஆண்டுகளில் சில குற்றச்சாட்டுகள் எழுந்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தின. கொடியேரி பாலகிருஷ்ணன் பதவியிலிருந்து விலக இந்த வழக்குகளும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் துபாயில் டான்சராக இருந்த சமயத்தில், கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரியுடன் பழக்கம் ஏற்பட்டு, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி நெருக்கமாகப் பழகிவிட்டு, குழந்தை பிறந்ததும், வேறு திருமணம் செய்துகொண்டார் எனப் புகார் அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார். பினோய் கொடியேரி மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சம்பவம் 2019-ம் ஆண்டு வாக்கில் பரபரப்பைக் கிளப்பியது.

பெங்களூரில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய அனூப் முகமது உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது. அனூப் முகமதுக்கு பண உதவி செய்ததாக கொடியேரி பாலகிருஷ்ணனின் மற்றொரு மகன் பினீஸ் கொடியேரி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் ஒரு ஆண்டு சிறையிலிருந்த பினீஷ் கொடியேரி கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஏ.விஜயராகவன்

மகன்களின் பிரச்னைகளில் ஓரளவுக்கு நெருக்கடி குறைந்திருக்கும் நிலையில், கொடியேறி பாலகிருஷ்ணனின் உடல் நிலையும் தேறியது. அதனால், கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தார். இந்த நிலையில், இன்று நடந்த சி.பி.எம் மாநில செயற்குழு கூட்டத்தில் கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப்பின்பு மீண்டும் மாநிலச் செயலாளராகப் பதவி ஏற்றிருக்கிறார் கொடியேரி பாலகிருஷ்ணன்.

Also Read: கேரளா: `இனியொரு ராஜினாமா இங்கு நடக்காது!' - கொதித்த கொடியேரி பாலகிருஷ்ணன்from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xPRIAm