திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி, அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் டு படித்துவந்தார். கடந்த 19-ம்தேதி வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு அதே பகுதியிலிருக்கும் ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துகொண்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் வாணியம்பாடி நகரப் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவி தற்கொலைச் செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

தூக்கு

அதே பகுதியில் வசித்துவரும் 19 வயதான கல்லூரி மாணவன் ஒருவரும், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியும் காதலித்து வந்திருக்கிறார்கள். மாணவியுடன் மிக நெருக்கமாக பழகிய மாணவன், திடீரென பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். ஒருக்கட்டத்தில், ‘இனிமேல் என்கிட்ட பேசாதே. நான் உன்னை காதலிக்கவில்லை. டைம்பாஸுக்காகத்தான் பழகினேன்’ என்று மாணவன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். செல்போன் பதிவுகளை வைத்து, மாணவியை தற்கொலைத் தூண்டிய வழக்கில் மாணவனை போலீஸார் கைது செய்தனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oXoR95