காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்து மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், `இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன?' என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்திருக்கிறார்.

தாக்குதல் நடத்திய கார் டிரைவர்

பஸ் டிரைவர் முத்துகிருஷ்ணன் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவர் சுரேஷை காவல்துறையினர் பிடித்தனர்.

இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற போது பஸ்ஸில் கார் இடித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு, கார் டிரைவர் கல்லால் தாக்கியிருக்கிறார். பஸ் டிரைவரின் புகார் அடிப்படையில் கார் டிரைவர் சுரேஷ், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவர் எந்த அமைப்பையும் சார்ந்தவர் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் விளக்கம்

மதுரையின் பரபரப்பான சாலையில் மக்களுக்கு முன் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது, ஆனால் அந்த காரின் உரிமையாளர் யார்? அந்த டிரைவரின் பின்னணி என்பது பற்றி காவல்துறை முழுமையாகத் தெரிவிக்காமல், அவர் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்று மட்டும் விளக்கம் அளித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அ.தி.மு.க-வினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்ததில், ``பஸ் டிரைவர் தாக்குதல் என்று வந்த தகவலைச் சிலர் திரித்து அதில் தேவையில்லாமல் தி.மு.க-வை சேர்த்து அவதூறு பரப்பியிருக்கின்றனர். சென்னை பதிவெண் கொண்ட அந்த இனோவா காரில் தி.மு.க கட்சிக்கொடியோ, தி.மு.க அடையாளமோ எதுவும் இல்லை. கார் ஓனர்கூட வரவில்லை. சிவகங்கையைச் சேர்ந்த டிரைவர்தான் ஓட்டி வந்திருக்கிறார். அவர் செய்த குற்றத்துக்கு தி.மு.க மீது பழிபோட்டுப் பரப்பி வருகிறார்கள். இதைச் செய்தவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் கொடுக்க இருக்கிறோம்" என்றனர்.

Also Read: மதுரை : முந்திச் செல்ல வழி விடாததால் ஆத்திரம்; அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கார் டிரைவர் கைது!from மாவட்ட செய்திகள் https://ift.tt/3l55QRg