கோவை தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்து வந்து 17 வயது மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

மிதுன் சக்கரவர்த்தி

Also Read: `நம்பர் 1 மாநிலம்' இலக்கு, தொழிலதிபர்களின் புலம்பல்; கோவை முதலீட்டாளர்கள் மாநாடு ஹைலைட்ஸ்!

இதுதொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தகவல் தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு மீரா கோவை போச்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில், மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மீரா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தீர்ப்பு

மேலும், மாணவியின் குடும்பத்துக்கு 30 நாள்களுக்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாள்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, போக்சோ நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. மிதுன் சக்கரவர்த்தியை கஸ்டடியில் விசாரிக்கும் பட்சத்தில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/310b1dG