கரூர், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தன் மனைவி செந்தில்ராணி பெயரில் க.பரமத்தி பகுதியிலிருக்கும் கொங்கு நகரில், 4 வீட்டுமனைகளை வாங்கியிருக்கிறார். பின்னர், அந்த வீட்டுமனையை வரைமுறை செய்வதற்காக க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சக்திவேல் விண்ணப்பித்திருக்கிறார்.

அப்போது, வீட்டுமனை வரையறைக்கு அனுமதி வழங்க வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் (ஊராட்சிகள்) குமரவேல் என்பவர் ரூ.25,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல், இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.25,000 ரொக்கப் பணத்தை சக்திவேலிடம் வழங்கியிருக்கின்றனர். சக்திவேலும், அதை எடுத்துச் சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியிலிருந்த குமரவேலிடம் வழங்கியிருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் குமரவேலுவை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சித் துறை அலுவலரின் திருச்சி இல்லத்திலும் தொடர்ந்து இரவு முழுவதும் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஆய்வாளர்! - நடந்தது என்ன?from மாவட்ட செய்திகள் https://ift.tt/310W4bi