திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்புவிழா மற்றும் பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வந்திருந்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நட்டா வந்திருப்பது திருப்பூர் மக்கள் செய்த பாக்கியம் என்று பேச்சை தொடங்கினார். ``இந்த உலகத்துலயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறோம்.

பா.ஜ.க செயற்குழு

அந்தக் கட்சியின் ஒரே ஒரு தேசியத் தலைவர் சாதாரணமாக ஒரு ஊருக்கு வருவது கிடையாது. ஆனால், அந்தப் பாக்கியம் இன்று திருப்பூருக்கு கிடைத்திருக்கிறது. இங்குள்ள டாலர் சிட்டி மக்கள் தங்களுடைய கடுமையான உழைப்பினால் திருப்பூரை உலக வரைபடத்திலே பதித்துள்ளனர்.

ஒரு சாதாரண செருப்பு தைக்கின்ற குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.,வால் கண்டெடுக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து மாநிலத் தலைவராக இருந்து, 20 ஆண்டுகளாக பா.ஜ.க.,விற்கு சட்டமன்றத்தில் வாய்ப்பில்லை என்றபோது, அதை வேல் எடுத்து உடைத்து 4 முத்தான எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்தில் அமர்த்திவிட்டு மோடிஜியின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகியிருக்கிறார் எல்.முருகன்.

அண்ணாமலை

வரவிருக்கின்ற 2026 தேர்தலில் 150 எம்.எல்.ஏக்களைப் பெற்று கோட்டையில் அமருவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இது ஒரு சரித்திரமான நாள்.

இந்தியாவிலேயே தயாரித்து இலவசமாக வீட்டுக்கே அனுப்பி 118 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருக்கிறது மோடி அரசாங்கம். தமிழகத்தில் 55 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள், 94 லட்சம் பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு ஆரம்பித்து கொரோனா காலத்தில் 1500 ரூபாயை மூன்று தவணையாக மோடி அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

பா.ஜ.க செயற்குழு

பா.ஜ.க.,வினர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க.,வின் திட்டங்களைச் சொல்லி, மக்களைச் சந்திக்க வேண்டும். வரப்போகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க., வெற்றி பெற வேண்டும்” என்றார்.

முன்னதாக செயற்குழுக் கூட்டத்தில் தமிழக பா.ஜ,க.-வின் சாதனை குறித்து நட்டாவுக்கு எடுத்தரைத்த அண்ணாமலை, ``நமது போராட்டங்களால், தி.மு.க அரசு பல முடிவுகளை மாற்றியமைத்துள்ளனர். காவரி, முல்லை பெரியாறு, மீனவர்கள், விவசாயிகள் என்று ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளோம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், தி.மு.க-வின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளோம்.

பா.ஜ.க செயற்குழு

நாடு முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டாலும், தி.மு.க அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் நீண்ட காலத்துக்கு மூடியிருந்தது. நமது போராட்டத்துக்கு பிறகுதான் கோயில்கள் திறக்கப்பட்டது” என்று பெரிய பட்டியலை அடுக்கினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2ZlIYoR