மதுரை அவனியாபுரத்திலிருந்து விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள பெருங்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தானமாக நிலம் வழங்கியதைப் பற்றிய குறிப்புகள் இருந்தது ஆய்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கல்வெட்டு

Also Read: தி.மலை: 3000 ஆண்டுகள் பழைமையான குத்துக்கல், சிற்பங்கள், கல்வெட்டு கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கண்டுகொள்ளாத கல்வெட்டுகள், பழங்கால சிலைகளை ஆய்வு செய்து, அதிலுள்ள தகவல்களை தெரிவித்து வருகிறார் தனியார் கல்லூரி உதவிப்பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன்.

இந்நிலையில், பெருங்குடியைச் சேர்ந்த முதுகலை வரலாற்று மாணவர் சூரியபிரகாஷ் தெரிவித்த தகவலின் அடிப்படையில் முனைவர் முனீஸ்வரன், முனைவர் இலட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள்சாமி ஆகியோர் பெருங்குடி ஆலமரத்து விநாயகர் கோயிலருகே புதைந்த நிலையிலிருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

ஆய்வாளர் து.முனீஸ்வரன்

இது பற்றி ஆய்வாளர்கள் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி தெரிவிக்கும்போது, ``வேளாண்மையும், மண்பாண்டத் தொழிலிலும் சிறந்த விளங்கிய பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது. மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்ட அத்தூணில் எட்டுக் கோணம், இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

தூணின் மேல் பகுதி பட்டையில் மூன்று பக்கம் நில அளவை குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. நிலத்தை வைணவக் கோயிலுக்கு நிலக்கொடையாகக் கொடுத்ததை கோட்டோவியம் சுட்டிக்காட்டுகிறது.

கல்வெட்டு

Also Read: கீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? | Doubt of Common Man

ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இணை இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் கல்வெட்டு எழுத்துக்களை படித்து பார்த்ததில் நிலதானம் வழங்கிய செய்தியும், அதை ஆவணமாக எழுதி கொடுத்தவரின் பெயர், நிலத்தின் நான்கு எல்லைப் பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரின் ஆட்சியில் நிலதானம் வழங்கியவரையும், ஆவணம் எழுதிக் கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது. மைப்படி எடுத்து ஆய்வு செய்ததில் எழுத்தின் வடிவத்தை வைத்து கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது. பல எழுத்துகள் தேய்மானமாகியுள்ளதால் முழுப் பொருளை அறிய முடியவில்லை" என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/30UTB2O